×

தஞ்சையில் உள்ள விண்ணப்ப பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தஞ்சை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழிச்சிகளிலும் பல்வேறும் ஆய்வு பணிகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு வருகைதந்திருந்தார். இந்நிலையில் திருச்சியில் நேற்றைய தினம் தீடீர் என திருச்சி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று அவர் காலை திருச்சியில் நடைபெற்ற வேளாண் சங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டார் அப்போது தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய முகாம்கள் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் தான் அவர் தஞ்சாவூர் செல்லும் வழியில் செங்கிப்படி அருகே உள்ள மனையேறி பட்டியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விண்ணப்பம் வழங்கும் முகாம் நடைபெற்று வந்தது.

இந்த முகாமிற்கு திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தையும் டோக்கனையும் பெற்றுள்ள கூடுமா தலைவிகள் ஏரளாமானோர் அங்கு குடியிருந்தனர். அவரக்ளிடம் அந்த திட்டத்தால் எவ்வாறான பயன்கள் மேற்கொள்கிறீர்கள் என்று கேட்டறிந்த முதல்வர் மேலும் அங்கு வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் விண்ணப்ப படிவத்தை நிரப்ப முடியாதவர்களுக்கு விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கான ஆட்கள் அங்கு இருக்கின்றனரா, மேலும் மகளிர் உரிமை திட்டத்தை பெறவுள்ள குடும்ப தலைவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தவர் குடும்ப தலைவிகளிடமும் இந்த கலைஞர் மகளிர் திட்டத்தால் எவ்வளவு தூரம் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் கேட்டறிந்தார்.

கேட்டறிந்துவிட்டு பின்னர் தஞ்சாவூர் நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கும் முதல்வர் மாலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையக்கட்டடத்தில் சீர்மிக திட்டத்தின் கீழ் ரூ. 140 கோடி மதிப்பில் கட்டிமுடியக்கப்பட்டுள்ள அமுனி பேருந்து நிலையம், சூரிய ஒளி மின் உற்பத்தி மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களை அவர் திறந்து வைக்கவுள்ளார். பல்வேறு இடங்களில் இதுபோன்ற முகாம்களில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post தஞ்சையில் உள்ள விண்ணப்ப பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Registration ,Thanjam ,Chief Minister ,G.K. Stalin ,Thanjai ,Tamil Nadu ,Trichy ,Thanjavur ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு...